நிவாரண வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று தெரியவருகின்றது.
அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப, அரச ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை பிரதமர் எடுத்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தால் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டது. தற்போது வாழ்க்கை செலவு அதிகரிக்கப்பட்டுள்ளதை கருத்திற் கொண்டு, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்று, வரவு -செலவுத் திட்டத்தை தயாரிக்கும் குழுவுக்குப் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதேவேளை, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு ஏற்றவாறு, தனியார் துறையினரது சம்பளத்தை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, வரவு-செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் குழுவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post