சில நாள்களுக்கு முன்னர் சிங்கப்பூர் அருகே சர்வதேச கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்டு வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கை திரும்புவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
தமது விருப்பத்தை மீறி இலங்கைக்கு மீண்டும் அனுப்பப்பட்டால் உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இருந்து கனடா நோக்கிப் புறப்பட்ட 303 பேருடன் கூடிய கப்பல், பிலிப்பைன்ஸ் அருகே கடற்பரப்பில் சேதமடைந்தது. அதையடுத்து வியட்நாம் அதிகாரிகள் அவர்களைக் காப்பாற்றி கரைசேர்த்தனர். அவர்களில் 76 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
தற்போது வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களை, நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் அங்கு வாழ்க்கைக் கொண்டு நகர்த்த முடியாதநிலையில் கனடா நோக்கிய பயணத்தை ஆரம்பித்ததாக அகதிகள் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் தங்களை இலங்கைக்குக் கொண்டு செல்லக் கூடாது என்றும், அவ்வாறு கொண்டு சென்றால் உயிரை மாய்த்துக் கொள்வோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post