மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவர் அம்மா பங்காரு அடிகளார் காலமாகிவிட்டார்
பங்காரு அடிகளார் கடந்த ஓராண்டுகளாகவே உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த மார்ச் மாதம் தந்து 83 வது பிறந்த நாளை கொண்டாடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜோதிட ரீதியில் ஆன்மீகவாதிகள் உயிருக்கு ஆபத்தாகக்கூடும் என்று ஜோதிடர்கள் முன்பே கணித்திருந்ததாகவும் ஒக்டோபர் இறுதி வரைக்குள் மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜோதிடர்களின் கணிப்பிற்கு அமைய பங்காரு அடிகளார் காலமாகியது அவரது பக்கதர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாள்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை நடைமுறை படுத்தியவர்.
இவரை பின்பற்றும் பக்தர்கள் இவரை “அம்மா” அன்று அழைப்பர். ஆன்மீகத்தில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்தி கொண்டதோடு பலகோடி மக்களின் குருவாகவும் ஏழை மக்களின் வழிக்காட்டியாகவும் விளங்கினார்.
இவரின் இழப்பு சமூகத்தில் எட்டப்பட்டுள்ள பேரிழப்பு என பக்தர்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரின் இறுதிசடங்குகள் இன்று நடைபெற உள்ளதுடன், மேல்மருவத்தூர் கோயிலில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இவர் 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post