Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

நோர்வேயில் இரவுக் களியாட்ட விடுதியில் தாக்குதல்!!- இருவர் உயிரிழப்பு!

June 26, 2022
in உலகம்
நோர்வேயில் இரவுக் களியாட்ட விடுதியில் தாக்குதல்!!- இருவர் உயிரிழப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இரவுக் களியாட்ட விடுதிகள் அமைந்துள்ள பகுதியில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இருபது பேர்வரை காயமடைந்துள்ளனர். அவர்களில் பத்துப்பேருக்கு மோசமான சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

தன்னினச் சேர்க்கையாளர்கள் (LGBTQ community) அதிகமாகக் கூடுகின்ற அந்தப் பகுதியில் உள்ள ‘லண்டன் பப்’ (London Pub) என்ற உணவகத்தினுள் 42 வயதான-ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட – நோர்வேப் பிரஜை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளார். அதிகாலை ஒருமணியளவில் தாக்குதல் நடந்தது.

சிறிது நேரத்தில் பொதுமக்களது உதவியுடன் பொலீஸார் அந்தத் தாக்குதலாளியை மடக்கிப் பிடித்துக் கைதுசெய்துள்ளனர். அவரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

பொலீஸ் மற்றும் உளவுப் பிரிவினருக்கு ஏற்கனவே தெரிந்திருந்த தாக்குதலாளி பற்றிய தகவல்களின் அடிப்படையில் இந்தச் சம்பவம் கடும் இஸ்லாமியப் பயங்கரவாத நோக்கத்தைப் பின்னணியாகக் கொண்டிருக்கலாம் என்று பொலீஸ் அதிகாரி ஒருவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

ஒஸ்லோவில் இன்று சனிக்கிழமை நடைபெறவிருந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளது பேரணியில் (Pride parade) தாக்குதல் நடத்தும் நோக்கம் இருந்திருக்கலாம் என்றும் விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸாரின் உத்தரவின் பேரில் அந்தப் பேரணி ரத்துச்செய்யப்பட்டிருக்கிறது. நோர்வே முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல் விழிப்பு நிலை பேணப்படுகிறது. பொலிஸார் துப்பாக்கிகளுடன் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: LGBTQ communityLondon Pubஒஸ்லோதாக்குதல்நோர்வே தலைநகர்
Previous Post

குமார வெல்கமவை தாக்கிய குற்றச்சாட்டில் சிக்கிய வர்த்தகர்!!

Next Post

காங்கேசன்துறையில் மூதாட்டியை வன்புணர்ந்து கழுத்தை வெட்டிக் கொலை!

Next Post
இலங்கையில் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு! -பலர் மீது கத்திக் குத்து!!

காங்கேசன்துறையில் மூதாட்டியை வன்புணர்ந்து கழுத்தை வெட்டிக் கொலை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.