நெடுந்தீவுக் கடலில் காணாமல் போயிருந்த கடற்படைச் சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது உடல் அனலைதீவுக் கடலில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டது என்று கடற்படைத் தகவல்கள் தெரிவித்தன.
கம்பளையைச் சேர்ந்த சாகர பியந்த ஜயசேகர (வயது-27) என்ற கடற்படைச் சிப்பாயே உயிரிழந்துள்ளார்.
நேற்று அதிகாலை நெடுந்தீவுக் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காரைநகர் மற்றும் நெடுந்தீவுக் கடற்படையினரின் படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கடலில் வீழ்ந்து காணாமல் போயிருந்தார்.
அவரைத் தேடும் நடவடிக்கைகளில் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட உடல் உடற்கூற்றுப் பரிசோதகைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post