நிதியமைச்சராகப் பதவியேற்ற ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பதவி விலகியுள்ள நிலையில், நிதியமைச்சர் பதவியை ஏற்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதே நாடாளுமன்ற உறுப்பினர்களின் அச்சத்துக்குக் காரணம் என்று தெரியவருகின்றது.
தேசியப் பட்டியல் ஊடாகச் சுயாதீன பொருளாதார நிபுணர் ஒருவரை நியமைச்சர் பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அனுமதியளித்துள்ளபோதும், அந்த முயற்சியும் இதுவரை பயனளிக்கவில்லை
அதேநேரம், இந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் சர்வதேச நாணய நியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டியுள்ளதால், நியமைச்சர் வெற்றிடம் அரசாங்கத்துக்குத் தலையிடியாக மாறியுள்ளது.
நிதியமைச்சர் மற்றும் இலங்கைக் குழுவினர் சர்வதேச நியத்துக்குச் சென்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதனால் நிதியமைச்சர் நியமனம் தொடர்பாக ஜனாதிபதி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றார் என்று கூறப்படுகின்றது.
Discussion about this post