நாவற்குழியில் வீடு உடைத்துத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டை பட்டப் பகலில் உடைத்து, 7 பவுண் நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், இருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட நகைகள் சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது என்றும், அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post