நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிவேரிய பிரதேசத்தில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணையின் போது, நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட பல திருட்டு சம்பவங்களுடன் சந்தேகநபர்களுக்கு தொடர்புள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, மேலும் மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜா-எல, பியகம, கடவத்தை, களனி, யக்கல, மஹபாகே, பேலியகொடை, மீகஹவத்தை, ராகம மற்றும் வெலிவேரிய ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடனும் குறித்த சந்தேகநபர்களுக்கு தொடர்புள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் வசமிருந்த 2 முச்சக்கர வண்டிகள், 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 11 சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
Discussion about this post