நாடாளுமன்ற அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதுடன்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோரை சபையிலிருந்து வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்தார்.
சபை தலைமை பீடத்திற்கு அருகில் வந்து பிரதி சபாநாயகருக்கு அச்சுறுத்தல் விடுத்தமையின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் இன்றைய அமர்விலிருந்து வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் சபையிலிருந்து வெளியேறினர்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வு இன்று (23) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post