இளவாலையில் நள்ளிரவில் வீடு புகுந்து 20 நகைகள் திருடப்பட்டுள்ளன என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இளவாலை, சிறுவிளான் பகுதியில் உள்ள வீடொன்றில் நடந்துள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு அந்த வீட்டில் நிகழ்வொன்று நடந்த நிலையில் வீட்டிலிருந்தவர்கள் அசந்து தூங்கியுள்ளனர். நேற்றுக் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் அனைத்தும் திறந்திருந்தன. வீட்டில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன.
இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்டது.
திருட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, திருட்டு நடந்த வீட்டிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கைத்தொலைபேசியும் திருடப்பட்டுள்ளது.
Discussion about this post