கடந்த மாதம் சுரங்க ரயில் நிலையத்தில் கத்தியால் தாக்குதலில் ஈடுபட்ட நபர் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் ரொறன்ரோ பொலிசார்.
கடந்த மாதம் நார்த் யார்க்கில் உள்ள டவுன்ஸ்வியூ பார்க் சுரங்கப்பாதை நிலையத்தில் கத்தியால் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், திடீரென்று ஒருவர் எந்த அறிகுறியும் இன்றி தாக்குதலை தொடுத்தார் என்றே தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் 25 வயதுடையவர் எனவும், படுகாயத்துடன் மீட்கப்பட்டு அவரை மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஆலன் சாலையை நோக்கி ஓடி மறைந்ததாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சனிக்கிழமை கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பொதுமக்களில் உதவியை நாடியுள்ளனர்.
அந்த நபருக்கு 30 முதல் 35 வயதிருக்கலாம் எனவும் தோராயமாக ஐந்தடி ஒன்பது அங்குலம் உயரம் எனவும், செங்குத்தான கருப்பு தலை முடி மற்றும் மீசையுடன் காணப்பட்டார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post