மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நியமித்தமை பாராட்டத்தக்க நடவடிக்கை என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும். நாங்கள் ஏற்கனவே வாங்கிய அனைத்து கடன்களுக்கும் நாட்டுக்கு சலுகை காலம் தேவை. கடன் தீர்வை மறுசீரமைப்பதற்கான பொறிமுறையை நாங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஜனாதிபதியும் பிரதமரும் தமது பதவிகளை விலக வேண்டும். ஜனாதிபதியும் பிரதமரும் தமது பதவிகளில் இருந்து விலகாவிட்டால் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வரும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும். புதிய வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
அரசாங்கம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் இடைக்கால அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது. மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அரசாங்கம் பதவி விலக வேண்டும்.
அரசாங்கம் மக்களால் நிராகரிக்கப்பட்டதால், இடைக்கால அரசாங்கத்தில் இணைவது பற்றி ஐக்கிய மக்கள் சக்தி நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏற்கனவே பிரபலத்தை இழந்த கட்சியில் இணையும் எண்ணம் இல்லை என்றார்.
Discussion about this post