Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

நத்தார் தினத்தில் இடம்பெற்ற திகில் சம்பவம்! கொத்தாக உயிரிழந்த மக்கள்

December 25, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
நத்தார் தினத்தில் இடம்பெற்ற திகில் சம்பவம்! கொத்தாக உயிரிழந்த மக்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

காசாவின் அல்-மகாஜி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில், சுமார் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை அந்த பகுதியில் அதிகளவான குடும்பங்கள் வசித்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த மேலும் பலர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதலில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஹமாசின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் மக்கள் அடர்த்தியான குடியிருப்பு தொகுதி அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் பேச்சாளர் அஷ்ரஃப் அல்-குத்ரா தெரவித்துள்ளார்.

குறித்த தாக்குதலால் மேற்கு கரையில் உள்ள பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இன்றி களையிழந்து காணப்படுகிறது.

காசா – இஸ்ரேல் மோதல் இடம்பெற்றுவரும் நிலையில் காசாவின் அனைத்துப் பகுதிகள் மீதும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

தற்போது இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக நேருக்கு நேர் தரைவழியில் சண்டையிட்டு வருவதால் இராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை 154 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதுடன் கடந்த வாரத்தில் மட்டும் 15 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு எகிப்து தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: #Gaza#Hamas War#Killed#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

இயேசு பிறந்த இடத்திலேயே நத்தார் பண்டிகை கொண்டாட்டம் ரத்து

Next Post

கிறிஸ்துமஸ் ஆராதனைக்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Next Post
கிறிஸ்துமஸ் ஆராதனைக்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கிறிஸ்துமஸ் ஆராதனைக்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.