பாலிவுட்டில் பசார் என்ற படத்தின் மூலம் சிறு ரோலில் நடித்து பின் கூலி நம்பர் 1 என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். தமிழ் கதிர் இயக்கத்தில் உருவான காதல் தேசம் படத்திலும் மணிரத்னமின் இருவர் படத்திலும் நடித்து பிரபலமானார் நடிகை தபு. பின் இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானார். கடைசியான 2000 ஆம் ஆண்டு சினேகிதியே படத்தில் தான் தமிழில் நடித்திருந்தார்.
அதன்பின் கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக தமிழில் சரியான வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். இந்தி படங்களில் தற்போது முக்கிய ரோலில் நடித்து வரும் நடிகை தபு, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகர்களுக்கு அதிகமாக சம்பளம் கொடுப்பது பற்றி எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.
அதில், எல்லா மீடியாக்களும் நடிகைகளிடம் சமமான சம்பளம் பற்றிய கேள்விகளை கேட்கிறார்கள். எல்லா பத்திரிக்கையாளர்களும் நடிகைகளிடம், நடிகர்கள் அதிகமாக சம்பளம் வாங்கப்படுகிறார்கள், நீங்கள் குறைவாக வாங்குகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேட்கிறார்கள். அதை ஏன் எங்களிடம் கேட்கிறீர்கள்?.
அதிகமாக வாங்கும் அந்த நடிகர்களிடம் கேட்க மாட்டுகிறீர்கள், அந்த கேள்விக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும். பரபரப்பை ஏற்படுத்த விரும்பினால், நான் அதை வெறுக்கிறேன் என்று கூறுகிறேன் போதுமா?.
எனக்கு அவ்வளவு சம்பளம் கொடுப்பது போதுமானது தான். இதற்கு ஏன் நான் பதில் சொல்ல வேண்டும். ஏன் இதை அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களிடம் ஏன் நடிகைகளைவிட அதிகமாக சம்பளம் வாங்குகிறீர்கள் என்று உங்களால் கேட்கமுடியவில்லை என்று கோபமாக பதிலளித்திருக்கிறார்
Discussion about this post