நடிகை திரிஷா, 40 வயதை தாண்டினாலும் இன்னும் இளைஞர்களின் பேவரைட் லிஸ்டில் இருந்து வருகிறார். லியோ படத்திற்கு பிறகு இவருக்கு, தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
தற்போது இவர் அஜித், சிரஞ்சீவியை தொடர்ந்து, பான் இந்திய அளவில் ஸ்டாராக இருக்கும் பிரபாஸ் உடன் நான்காவது முறையாக கூட்டணி வைத்துள்ளார்.
திரிஷா – பிரபாஸ் இணைந்துள்ள படத்தை தெலுங்கு இயக்குனர் சந்தீப் வாங்கா ரெட்டி இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரபாஸ், ஹீரோ, வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதுமட்டுமின்றி படத்தில் ரஷ்மிகா மந்தனாவும் முக்கியமான ரோலில் நடிக்கிறாராம். ரூ. 300 கோடியில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் இரண்டு ஆண்டுகள் எடுக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிமல் படத்தை போல இந்த படமும் வெற்றி பெற ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post