தென்னை மரத்தில் இருந்து தவறி வீழ்ந்தவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை, புலோலி மத்தியைச் சேர்ந்த ஆறுமுகம் நவரட்ணம் (வயது-65) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் 5 பிள்ளைகளின் தந்தையாவார்.
கடந்த முதலாம் திகதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஏணி வைத்து தென்னை மரத்தில் ஏறியபோதே இவர் தவறி வீழ்ந்துள்ளார்.
இவர் உடனடியாக மந்திகை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவர், சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.
Discussion about this post