கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவுகள் பாதிக்கப்பட்ட பின், தற்போது நடைபெற்றுவரும் G7 உச்சி மாநாட்டில் கனடா பிரதமரும் இந்திய பிரதமரும் சந்தித்துக்கொண்டார்கள்.
கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது.
அதன்பின், தற்போது இத்தாலியில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில்தான் கனேடிய மற்றும் இந்திய பிரதமர்கள் அதிகாரப்பூர்வமாக சந்தித்துக்கொள்கிறார்கள்.
அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை G7 உச்சி மாநாட்டில் சந்தித்தாக மட்டும் எக்ஸில் தெரிவித்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இருவரும் சந்தித்துக்கொள்வதை காட்டும் புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
Discussion about this post