நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் இடம் பெற்ற 21 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் வியாபாரம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிசூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்கள் அதனுடன் தொடர்புடையவர்களாவர்.
வெளிநாடுகளில் தங்கியிருக்கும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கலின் பின்னணியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதுவரையில் சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post