நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக சமூக ரீதியான பிரச்சினைகள் உருவாகக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்களில் ஒரு பகுதியினர் பாலியல் தொழிலாளிகளாக மாறக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று எயிட்ஸ் நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் சிறப்பு மருத்துவ நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பற்ற பாலியல் செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்துள்ள அவர், அறிமுகமாகாத நபர்களுடன் பாதுகாப்பின்றி பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடும் போது பெண்கள் பாலியல் சம்பந்தப்பட்ட பல நோய் தொற்றுக்கு உள்ளாக கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post