ரஷ்யா – உக்ரைன் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் 40 ஆயிரம் பேரைக் கொண்ட சிறப்புப் படையணியை நேட்டோ களமிறக்கியுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்று நாள்களாக் கடும் மோதல் நடைபெற்று வருகின்றன. உக்ரைனின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் அழித்துள்ள நிலையில் தலைநகரான கீவ் நகருக்குள் நுழைந்துள்ளன.
உக்ரைன் இராணுவமும் பதில் தாக்குதல் நடத்திவரும் நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுடன் எல்லையைப் பகிர்கின்றன. இந்தநிலையில் ரஷ்யாவின் படையெடுப்பு, உக்ரைனையும் தாண்டி ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த எல்லைப் பகுதிகளில் தனது சிறப்புப் படையினரை நேட்டா களமிறக்கியுள்ளது. நேட்டா வரலாற்றில் சிறப்புப் படை களமிறக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் செய்தியாளர்களை நேற்றுச் சந்தித்தபோது, இந்தத் தாக்குதல் உக்ரைன் மீதானது மட்டுமல்ல. இது உக்ரைனில் உள்ள அப்பாவி மக்கள் மீதான பேரழிவு தரும் பயங்கரமான தாக்குதல். ஆனால், இது முழு ஐரோப்பிய பாதுகாப்பின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகும். அதனால் நாங்கள் இந்த தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று கூறினார்.
Discussion about this post