இலங்கை மத்திய வங்கியிடம் ஒரு மில்லியன் டொலர் கூட இல்லை என்று தெரிவித்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டங்கள் எவையும் எம்மிடம் இல்லை என்று தெரிவித்தார்.
கடன்களைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்கள் என்ன என்று நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியிருந்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு பதிலளித்துள்ளார்.
எங்கிருந்து பணத்தைப் பெறுவது என்பது தெரியாத நிலையில் உள்ளோம் என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார மீட்புக் குழுவுடன் பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளேன் என்று கூறினார்.
உலக வங்கியிடம் இருந்து 160 மில்லியன் டொலர் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதைப் பெற்றோலியப் பொருள்கள் இறக்குமதிக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறினார்.
Discussion about this post