தமது மகளின் திருமணத்துக்காக வைத்திருந்த தங்க நகைகள், மணமகனுக்காக கொள்வனவு செய்த தங்கமோதிரம் உட்பட 8 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பெற்றோர் சாலியவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சாலியவெவ பொலிஸ் பிரிவில் அளுத்கமயிலுள்ள வீடொன்றிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் எவரும் இல்லாதவேளை, பின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்துள்ள கொள்ளையர்கள், கண்ணாடி மேசையில் பாதுகாப்பாக வைத்திருந்த இந்த நகைகளை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளனர் என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post