இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில், திருமணத்தன்று மணமக்கள் விஷம் குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், பல நாட்களாக நீஷா(20) என்ற பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தன் காதலன் தீபக்கை(21) வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய தொழில் காரணமாக திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் தருமாறு காதலன் கேட்டதும், ஆத்திரம் அடைந்த குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதையடுத்து வேறு வழியின்றி இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாயன்று கோயிலில் திருமணம் நடைபெற இருந்தது.
இதனிடையே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் திருமணத்தன்று மணமகன் தீபக் தான் விஷம் குடித்தாக, மணமகளிடம் கூற அதிர்ச்சியில் மணமகளும் விஷம் குடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சையளிக்கபட்ட நிலையில் மணமகன் தீபக் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதே சமயம் மணமகள் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருமணத்தன்று மணமக்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், விஷம் குடித்து மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Discussion about this post