மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் யாத்திரிகர் மடம் அமைக்கும் பணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
நாயன்மார்களின் பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்தின் யாத்திரிகள் மடம் போரால் அழிவடைந்திருந்தது. அந்த யாத்திரிகர் மடத்தை மீள அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மன்னார் பிரதேச சபை மற்றும் உரிய திணைக்களங்களின் அனுமதி பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் யாத்திரிகர் மடம் அமைக்கும் நடவடிக்கைகளுக்கு மாற்று மதத்தவர்கள் சிலரே இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர் என்று பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தனர் என்றும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கட்டடப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் நேற்று பெண்கள் சிலர் கட்டடத்தில் வந்தமர்ந்து கட்டுமானப் பணிகளைச் செய்யவிடாது அடாவடியில் ஈடுபட்டனர் என்றும் கூறப்படுகின்றது.
ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயல்கள் அனைவருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும், அவர்களை உரிய முறையில் வழிநடத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post