திருகோணமலை மீன் பொதுச் சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக சில்லரை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
காற்றின் வேகம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் கடலுக்குச் செல்லும் மீனவர்களின் வீதம் குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வெளி மாவட்டங்களில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக வருபவர்கள் சுருக்குவலை போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதினால் வலைகளில் மீன்கள் குறைவாகவே பிடிபடுவதாகவும் பிரதேச மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மீன் பொதுச் சந்தையில் திருக்கை மீன் ஒரு கிலோகிராம் 800 ரூபாவுக்கும், நெத்தலி ஆயிரத்து 500 ரூபாய்க்கும் கனவாய் 1100 ரூபாய்க்கும் இறால் ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post