Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

தாமதம் நீடிக்குமானால் பெரும் நெருக்கடி எழும்!- பிரியங்க எச்சரிக்கை!

October 19, 2022
in உள்ளுர்
தாமதம் நீடிக்குமானால் பெரும் நெருக்கடி எழும்!- பிரியங்க எச்சரிக்கை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டின் கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

உலகில் ஏனைய 54 நாடுகள் கடன் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றன என்று ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் அறிவித்துள்ளது.

உலகளாவிய கடன் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் கடன் மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தை நிறைவு செய்வது இலங்கைக்கு நன்மை பயக்கும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மேலும் தாமதமானால் இலங்கையில் வருமானம் குறைந்த மக்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கடன் வழங்கும் நாடுகளின் நம்பிக்கையை பெற வேண்டிய நடவடிக்கை தாமதமின்றி உடனடியாக இலங்கை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாடு சந்திக்க போகும் நெருக்கடி மிகவும் பாரதூரமானதாக இருக்கும்.- என்றார்.

அதேவேளை, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, 22 கடன் வழங்கும் நாடுகளை உள்ளடக்கிய பரிஸ் கிளப், கடன் நெருக்கடிக்கு விரைவான தீர்வு காணும் இலங்கையின் முயற்சிகளுக்கு அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆயினும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்கு ஏனைய நாடுகளும் உடன்பட வேண்டும்.

பரிஸ் கிளப்புக்குள் இலங்கைக்கு அதிக கடன் வழங்கும் நாடுகளுக்கு இந்திய மற்றும் சீனா போன்ற நாடுகள் உள்ளடங்கவில்லை.

அவ்வாறான நாடுகளின் அனுமதி பெறுவது கட்டாயமாகும். இல்லை என்றால் நாடு மிகவும் ஆபத்தான நிலைக்குள்ளாகும் என்றார்.

Tags: இலங்கைகடன் நெருக்கடிகடன் மறுசீரமைப்புபிரியங்க துனுசிங்க
Previous Post

இன்றைய ராசிபலன் – 19.10.2022

Next Post

பணவீக்கப் பட்டியலில் ஏறி, இறங்கும் இலங்கை!

Next Post
பணவீக்கப் பட்டியலில் ஏறி, இறங்கும் இலங்கை!

பணவீக்கப் பட்டியலில் ஏறி, இறங்கும் இலங்கை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.