இந்தியா-ஆந்திராவில் சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் எலுமிச்சை மற்றும் சாம்பலை கொடுத்து 50 ஆயிரம் ரூபாவை
மருத்துவர் ஒருவர் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஐதராபாத் எல்.பி.நகரில் இயங்கிவரும் ஆயுர்வேத கிளினிக்கில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்
தலைவலி மற்றும் நரம்பு பகுதியில் வலி இருப்பதாக கூறி, ஆயுர்வேத சிகிச்சையை பெற அங்கு சென்றுள்ளார்.
ஆனால், அங்கிருந்த மருத்துவர் மருந்துகளை கொடுப்பதற்கு பதிலாக எலுமிச்சை மற்றும் சாம்பலை ஒரு சிறிய
பையில் கொடுத்துள்ளார்.
பின்பு, அமாவாசை தினத்தன்று பூஜைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார். பூஜை அறையில் அந்த பெண்ணை
அமரவைத்து மந்திரங்களை உச்சரித்துள்ளார்.
மேலும், பூஜை பொருள்கள் எனக்கூறி மளிகை பொருட்களையும் வாங்கி வருமாறும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல்,
50 ஆயிரம் ரூபா பணத்தையும் குறித்த பெண்ணிடம் இருந்து பெற்றுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, உறவினர்கள் பொலிசாரிடம்
அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, பொலிஸார் மேலதிக விசாரணையினை நடத்தி வருகின்றனர்
Discussion about this post