விடுதலை புலிகளின் தலைவர் யுத்ததின் போது அறத்தின் வழியில் போரை நடத்தியதாக தமிழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளது தற்போது வைரலாகி வருகின்றது.
குறித்த நிகழ்வில் மேடையில் பேசிக்கொண்டிருந்த சீமான் போர் இடம்பெற்று கொண்டிருக்கும் போது, அறத்தின் வழியை பின் பற்றியே இரவு இராணுவத்தினர் இருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தை விடுதலை புலிகளின் தலைவர் தகர்த்தியாதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலாக பொது விமான நிலையத்தை அவர் தாக்கவில்லை என்றால் சிங்கள மக்கள் அல்ல எங்கள் எதிரிகள், எம் மக்களை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்தினர் தான் எங்கள் எதிர் என அறத்தின் வழியில் நின்ற மறவன் தான் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் என புகழ்ந்து பேசியுள்ளார்.
இதேவேளை கொழும்பு செஞ்சோலையில் குண்டுவீச்சு தாக்குதலை மேற்கொண்டு 61பாடசாலை மாணவிகளை சிங்கள இராணுவத்தினர் கொன்று குவிந்தனர். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரிடம் அப்போது வான்படை இருந்தது வானூர்தியில் சென்று இவரும் 10 பாடசாலை மீது குண்டு தாக்குதலை நடாத்தியிருக்கலாம் ஆனால் அவர் அதை செய்யவில்லை.
என்றால் அறத்தின் வழியில் நடக்கின்ற மறவன் பிரபாகரன், அவர் நடத்திய போர் அறத்தின் விழியில் நடத்திய போர், என சீமான் பேசியுள்ளார்.
இதேவேளை அவர் இவ்வாறு பேசியிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Discussion about this post