அமைச்சர்கள் வெளியிட்ட பொய்யான செய்திகள் காரணமாகவே நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளமை நகைப்புக்குரியது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது, இவ்வாறு பிரதமர் கூறினாலும் வேறு யாராவது கூறினாலும் அது முட்டாள்தனமாக கருத்து என்றே கூற முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறானால் எதிர்வரும் நாள்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது இருக்க வேண்டும் என்று தெரிவித்த விமல் வீரவன்ச, நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
நாட்டில் அந்நிய செலாவணிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என்று சுட்டிக்காட்டிய விமல் வீரவன்ஸ, நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று மனதைத் தேற்றித் தூக்கச் செல்ல வேண்டும் எனில், தலையில் பொல்லால் அடித்து ஞாபக மறதியையே ஏற்படுத்த வேண்டும் என்றார்.
Discussion about this post