தமிழ் அரசியல் கைதிகளை போன்று சிறையில் இருக்கும் முன்னாள் இராணுவ வீரர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி குண்டு தொடர்பில் இருநூறு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு அண்மையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி இருந்தார்.
அது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,
விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுவிப்பதில் தவறில்லை என்றாலும் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் தண்டனை பெற்று சிறைக்குச் சென்ற பல இராணுவ வீரர்கள் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் முன்னாள் இராணுவ வீரர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் தாம் பல தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் சிறையில் இருந்ததாகவும் நாமல் ராஜபக்க்ஷ இதன்போது தெரிவித்தார்.
Discussion about this post