தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள். அனைவரும் திருத்தப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத் துணைவேந்தர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா கூறியுள்ளார்.
தந்தை செல்வாவின் 124ஆவது ஜனன தின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கணவனை இழந்த பெண்கள் இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், ஆனால் எமது அரசியல்வாதிகளிடம் அவர்களுக்கு உதவ எந்தத் திட்டமோ, நிகழ்ச்சி நிரலோ இல்லை என்று கூறியுள்ளார்.
ஏதாவது ஒரு சம்பவம் என்றால் முதல் நாள் கூட்டத்தைக் கூட்டி ஒரு அறிக்கையைத் தயாரித்து அதை வாசித்துவிட்டுச் செல்லும் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்று துணைவேந்தர் கூறினார்.
அடுத்த மாகாண சபைத் தேர்தலுக்கு எவ்வாறு செயற்படுவது என்று சிந்திக்கிறார்களே தவிர, தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக அரசியல்வாதிகள் செயற்படவில்லை என்று துணைவேந்தர் சாடியுள்ளார்.
நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என்று கூறிய துணைவேந்தர், ஆனால் தொடர்ந்தும் அவ்வாறே இருக்கத் தேவையில்லை, எமக்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது என்று கூறினார்.
Discussion about this post