தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் பட்டியலினத்தைச் சேர்ந்த பலருக்கு பூணூல் அணிவிக்கப்பட்ட சம்பவம் புதிய சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
இந்த நிகழ்வுக்கு பல கட்சிகளும் கண்டங்களை வெளியிட்டுள்ளன.
சனாதனம் குறித்து அண்மையில் திமுகவும் பாஜகவும் கடும் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்ட நிலையில் கடந்த புதன்கிழமையன்று நந்தனாரின் குருபூஜை விழாவில் ஆளுநர் முன்னிலையில் பட்டியலினத்தைச் சேர்ந்த 100 பேருக்கு பூணூல் அணிவிக்கப்பட்ட சம்பவம் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
மேளதாளங்கள், மந்திரங்கள் முழங்க பட்டியலினத்தோருக்கு இந்த நிகழ்வில் பூணூல் அணிவிக்கப்பட்ட நிகழ்வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது தரப்பில் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
உழைக்கும் மக்களை இழிவுபடுத்திவரும் சனாதனம், பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்களாக காட்ட இவ்வாறான தந்திரங்கள் ஊடாக செயற்படுவதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஏற்பாட்டுக்குழு
ஆளுனர் முன்னிலையில் பூணூல் அணிய ஒப்புக்கொள்ளும் நபர்களுக்கு பணமும் கடனுதவியும் தருவதாக வாக்குறுதிககள் வழங்கப்ட்டு ஆட்கள் திரட்டப்பட்டதாகவும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால் இந்த நிகழ்ச்சியை நடத்திய தமிழ் சேவா சங்கம் என்ற அமைப்பு இவ்வாறாக வெளிவரும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் விதமாகவே இந்தநிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது
Discussion about this post