இலங்கையில் இருந்து உயிர் பிழைக்க இந்தியாவிற்கு தப்பிச் சென்ற 8 பேர் 3 தினங்களாக நடுக்கடலில தத்தளித்து தம்மை காக்குமாறு கோரிய நிலையில் இன்று காலை 9 மணிக்கே மீட்கப்பட்டனர்.
இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து தமிழகம் நோக்கி படகில் ஏற்றிச் செல்லப்பட்ட 8பேரையும இலங்கை படகு ஓர் திடலில் இறக்கி விட்டுத் திரும்ப்பிய நிலையிலேயே 8 பேரும் 3 தினங்களாக உணவோ அல்லது குடிநீரோ இன்றித் தவிப்பதாகவும் இதில் நான்குபேர் சிறுவர்கள் என திடலில் தவித்தவர்கள் தெரிவித்தனர்.
இதேநேரம் குறித்த விடயம் முதலில் இரு நாட்டு கடற்படையினரின் கவனத்திறகும் கொண்டு செல்லப்பட்டு தேடுதல் இடம்பெற்று 8 பேரும் இந்தியாவின கட்டுப்பாட்டில் உள்ள 3ஆம் தீடையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவ்வாறு உறுதி செய்யப்பட்டவர்களை மீட்குமாறு நேற்று மாலை 6 மணிமுதல் கோரிக்கை விடப்பட்டது. இருந்தபோதும் இன்று காலை 9 மணிக்கே இந்திய கரையோர காவலபடையினர் குறித்த 8 பேரையும் படகில் ஏற்றியுள்ளனர்.
ஆபத்து நிறைந்த கடல் பயணத்தை மேற்கொண்டு தொடர்புகள் அற்ற பிரதேசத்தில் அந்தரிப்பு பயணங்களை மேற்கொண்டும் தமிழ் நாட்டில் முகாமில் அடைபட்டே வாழ வேண்டும் என்பதனை அறிந்தும் மக்கள் அதிக பணத்தை செலுத்தி பயணிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post