இலங்கையில் இருந்து மேலும் 19 பேர் ஏதிலிகளாக தமிழகத்தின், தனுஷ் கோடிக்குச் சென்றுள்ளனர்.
அண்மையில் தமிழகத்துக்கு ஏதிலிகளாக சென்ற 20 பேர் தற்போது மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டள்ள நிலையில், இன்று அதிகாலை 2 குழந்தைகள் உட்பட் 5 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.
திருகோணமலை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே ஏதிலிகளாகச் சென்றுள்ளனர் என்று தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை தமிழகப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, ஊடுருவல்கள் இடம்பெறலாம் என்ற சந்தேகத்தில், இந்தியாவின் கரையோரப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post