தபால் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று தபால் திணைக்களம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சாதாரண தபால் கட்டணத்தை 15 ரூபாவிலிருந்து 20 முதல் 40 ரூபா வரையில் உயர்த்த வேண்டும் எனவும், அதிவேக தபால் சேவைக்கான கட்டணத்தை 55-65 ரூபாவிலிருந்து 200 ரூபாவாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டில் தபால் திணைக்களம் 7.2 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது. தபால் கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால் நட்டம் காரணமாக பல தபாலகங்களை மூட வேண்டிய நிலைமை உருவாகும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கடதாசி உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாலும் கட்டணங்களை உயர்த்த வேண்டிய தேவை உள்ளது என்றும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
Discussion about this post