தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி வருபவர் கலா மாஸ்டர். 12 வயதில் உதவி டான்ஸ் மாஸ்டராக இருந்து தற்போது டான்ஸ் மாஸ்டராக பல படங்களில் பணியாற்றி வருகிறார். சினிமாவில் மட்டுமில்லாமல் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக இருந்து பல கலைஞர்கள் உருவாக முக்கிய பங்கினையாற்றினார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அவரின் டான்ஸ் கிளாஸில் நடிகர் தனுஷும் சேர்ந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார். நான் திருடா திருடி படத்தில் தனுஷுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்க சென்ற போது என்னை பார்த்ததும் தனுஷ், மேடம் நான் தான் தனுஷ் என்று சொன்னதும் எனக்கு உங்களை தெரியும், உங்களுடைய படத்திற்காக தானே நான் வந்திருக்கிறேன் என்று சொன்னேன்.பின் நான் உங்களின் டான்ஸ் கிளாஸில் டான்ஸ் கற்று இருக்கிறேன் என்று சொன்னார். ஆனா நான் பார்த்திருக்கிறேன் என்று நானும் சொன்னேன். அதற்காக அப்போது, நீங்க இவனெல்லாம் எங்க ஹீரோவாக போகிறான் என்று சொன்னீர்களே? என்று சொன்னார்.
நான் அந்த மாதிரி உன்னை பற்றி ஒரு வார்த்தை கூட சொன்னது இல்லை, நானே குரூப் டான்ஸராக இருக்க்ம் போது எவ்வளவு அவமானங்கள் பட்டிருக்கிறேன். நான் யாரையும் இந்த மாதிரி சொல்லமாட்டேன் , நான் சொன்னதை நீ தப்பா புரிந்து கிட்டாய் என்று தனுஷிடம் சொன்னேன். நேரடியாக தனுஷ் என்னிடம் இப்படி சொன்னதும் வருத்தமாகத்தான் இருந்தது.அதன்பின் நான் சொன்ன விளக்கத்திற்கு தனுஷ், நான் அந்த நேரத்துல ரொம்ப ஒல்லியா இத்துனூண்டு இருப்பேன், அப்போ நீங்க உங்க மனதில் இவனெல்லாம் எங்க கதாநாயகனாக வரப்போறான் என்று நினைத்திருப்பீங்க என்று நானா சொல்றேன் என்று சிரித்துக் சிரித்த படி தனுஷ் என்னிடம் கூறினார் என்று கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post