செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தின் முன்பாக இன்று காலை இந்த அனுஷ்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த அஞ்சலிக்கு பொலிஸார், இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்திய போதிலும், அவற்றினையும் மீறி இந்த அனுஷ்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியிலிருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி விமான படையினர் மேற்கொண்ட விமான குண்டு வீச்சில் 54 மாணவிகளும் 7 பணியாளர்களுமாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post