சிறுமியின் தங்க வளையலை தூக்கிச்சென்று காகமொன்று கூடு கட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு காப்பட் பகுதியை சேர்ந்த தம்பதியினர் நசீர் மற்றும் ஷரீப, திருமண நிகழ்வொன்றுக்கு சென்றுள்ளனர் அதன் போது அவரது சிறிய மகளையும் தங்க நகைகள் அணிவித்து அழைத்துச் சென்றுள்ளனர்.
திருமணம் முடிந்து மீண்டும் வீடு திரும்பிய பின்னர் சிறுமி தங்க வளையலை கழற்றி கடதாசியில் சுற்றி வீட்டில ஓர் இடத்தில் வைத்துள்ளார்.
மீண்டும் ஒருநாள் அவர்கள் உறவினர் வீட்டுக்குச் செல்லும் சிறுமியின் வளையலை தேடிப்பார்த்த போது அது மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது.
அதையடுத்து அவர்கள் பாத்திமா நகையை கழற்றி வைத்த இடம் உட்பட வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தனர்.
ஆனால் எங்கு தேடியும் நகைகள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பதற்றமடைந்தனர். அவரும், பையின் மீது வைத்ததாக கூறினார்.
ஆனால், அந்த இடத்தில் பார்த்த போது வளையல் இல்லாததால் அவர்கள் வேதனையடைந்தனர். இந்நிலையில், அவர்களின் உறவினர்கள் காகம் ஒன்று பிளாஸ்டிக் வளையலை தூக்கி சென்றதை பார்த்துள்ளனர்.
அதனால், தங்களது தங்க வளையலையும் தூக்கிச் சென்றிருக்கக்கூடும் என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது, இதன்பின்னர், சிறுமியின் உறவினர் காகம் கூடு கட்டி வைத்திருந்த தென்னை மரத்தில் ஏறி பார்த்தனர்.
அப்போது சிறுமியின் தங்க வளையல் இருந்தது, அவர் அதனை எடுத்து சிறுமியின் தாயிடம் கொடுத்துள்ளார்.
Discussion about this post