ஏற்றுமதி மூலம் கிடைக்கும் டொலர் வருமானத்தை முழுமையாக ரூபாவுக்கு மாற்ற வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முன்வைத்துள்ள யோசனையானது நடைமுறைக்கு மாறானது மற்றும் அடிப்படையற்றது என ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இலங்கையில் உள்ள வங்கிகள் கடன் கடிதம் மற்றும் டொலரை வழங்க மறுத்துள்ளன. எனவே, இதன் காரணமாக ஏற்றுமதி நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு டொலரை வெளிநாட்டு வங்கியில் வைத்திருக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அவ்வாறு செய்யாவிட்டால், ஏற்றுமதிக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவும், வெளிநாட்டு நிறுவனங்களிடம் பெற்ற கடன் தவணையை செலுத்தவும் முடியாத நிலை ஏற்படும் எனவும் ஏற்றுமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஏற்றுமதி நிறுவனங்கள் மேற்கொள்ளும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு குறிப்பிட்ட சதவீத டொலரை வைத்திருக்க விரும்புவதாகவும் ஏற்றுமதியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மத்திய வங்கி ஆளுநரின் யோசனையானது தங்க முட்டைகளைப் பெறுவதற்காக கோழியைச் சுடுவது போன்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Discussion about this post