டென்மார்க் தலைநகர் கொப்பன்ஹேகனின் தென்பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவரவில்லை என்றும் கூறியுள்ளனர்.
வணிக வளாகத்துக்குள் புகுந்த துப்பாக்கிதாரி சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். வணிக வளாகத்தில் கூடியிருந்த மக்கள் சிதறி ஓடும் காட்சிகள் அந்த நாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் டென்மார்க் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post