டீசல் தாங்கிய கப்பல் ஒன்று இன்று(16) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது. மற்றொரு கப்பல் இன்று மாலை நாட்டை வந்தடையவுள்ளது என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
40,000 மெட்ரிக் தொன் டீசல் தாங்கிய கப்பலே நாட்டை வந்தடைந்துள்ளது. அதன் மாதிரிகள் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோல் தாங்கிய கப்பல் 18, 19 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையுமென தெரிவிக்கப்படுகின்றது.
லங்கா ஐ.ஓ சி நிறுவனம் தொடர்ந்து விநியோகம் செய்து வந்தாலும், எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் மிக நீண்ட வரிசைகள் உள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் எரிபொருள் விநியோகத்தை நிர்வகிப்பதற்காக புதிய மென்பொருள் ஒன்றும் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, இன்று எரிபொருள் விநியோகம் செய்யும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்த விசேட அறிவிப்பை சிபெட்கோ வெளியிட்டுள்ளது.
Discussion about this post