நாட்டின் பெரும்பான்மையான பொதுப் பிரச்சினைகள் டிசெம்பர் வரை தொடரும் என்பதை ஜனாதிபதியின் சிம்மாசன உரை தெளிவுபடுத்தியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் உரையில் மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடக்கப்படவில்லை என்பது கேள்விக்குரியது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
டிசெம்பர் மாதம் வரை எரிபொருள் நெருக்கடி தொடரும் எனவும், இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்படும் எனவும் எரிபொருள் தட்டுப்பாட்டால் அரச சேவை மற்றும் ஏனைய தொழில்களும் தடைபடும் எனவும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்கத் தவறியுள்ள நிலையில், கடந்த கால பிரச்சினைகளை மறந்துவிட வேண்டும் என்று அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் இளைஞர்கள் தலைமையிலான மக்கள் போராட்டம் ஒரு மாற்றத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது என்று ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
Discussion about this post