முன்னாள் அமைச்சரும், மஹிந்த ராஜபக்சவின் தீவிர அபிமானியுமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கைது செய்யக் கோரி நேற்றுக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுத் திணைக்கத்துக்கு வந்திருந்த நிலையில், காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தும் மக்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது கடந்த 9ஆம் திகதி நடத்தப்பட்ட வன்முறைகளில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு தொடர்புள்ளது என்று தெரிவிக்கப்படும் நிலையிலேயே அவரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post