ஜூன் மாதத்துக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சுமார் 554 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகின்றது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த அந்நியச் செலாவணித் தேவையில் 100 மில்லியன் டொலர் தற்போதுள்ள இந்திய கடன் திட்டத்தின் கீழ் பெறப்பட உள்ளது. ஏனைய தொகையை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டொலர் பற்றாக்குறையால் மீண்டும் ஜூன் மாதம் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post