நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கு உரிய தீர்வை ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க முன்வைப்பார் என அதிகளவான மக்கள் நம்புகின்றனர் என இலங்கையின் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.
கணக்கெடுப்பில் கலந்துகொண்டவர்களில் 48.5 பேர் நாட்டைக் கட்டியெழுப்ப அநுரகுமார திஸாநாயக்கவால் முடியும் என நம்புகின்றனர்.
அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை 36.6 வீதமானோரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை 29.1 வீதமானோரும் நம்புகின்றனர்.
அதேவேளை டலஸ் அழகப்பெருமவை 23.7 வீதமானோரும் பிரதமர் தினேஷ் குணவர்தனவை 18.3 வீதமானோரும் நெருக்கடியைத் தீர்ப்பர் என நம்புகின்றனர்.
மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை 11.9 வீதமானோர் நம்புகின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post