ஜனாதிபதி மாளிகையை, போராட்டக்காரர்கள் நேற்று முற்றுகையிட்ட பின்னர், இரகசிய அறையொன்றில் இருந்து பெருந்தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது.
ஐந்தாயிரம் ரூபா நோட்டுகள் அடங்கிய பணத்தை போராட்டக்காரர்கள் கணக்கிட்டு, அதனை பாதுகாப்பு தரப்பினரிடம் கையளித்துள்ளனர்.
பணத்தின் சரியான பெறுமதி இன்னும் தெரியவரவில்லை, அது தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதி செயலகத்தையும் போராட்டக்காரர்கள் நேற்று சுற்றிவளைத்தனர். தொடர்ந்தும் அங்கேயே தங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையையும், செயலகத்தையும் பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி இன்று காலை முதல் செல்கின்றனர்.
Discussion about this post