ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (18) அதிகாலை அமெரிக்காவின் நியூயோர்க்
நகருக்கு பயணமானார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் 76 ஆவது
பொதுச்சபை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அமெரிக்காவிற்கு
பயணித்துள்ளார்.
ஜனாதிபதி வௌிநாடொன்றில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளும் முதலாவது
சந்தர்ப்பம் இதுவாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதி கூட்டத்தொடரில் உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அரச தலைவர்கள் சிலருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை
நடத்தவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதி ஆலோசகர் லலித்
வீரதுங்க மற்றும் வௌவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத்
கொலம்பகே ஆகியோரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் அமெரிக்காவிற்கு
பயணித்துள்ளனர்.
Discussion about this post