சூதாட்ட விடுதிகளின் வருடாந்த வரி ரூபா 150 வீதத்தால் 200 மில்லியன் முதல் ரூ. 500 மில்லியன் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கசினோ மீதான வருடாந்த வரி அதிகரிப்பு ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
உரிய வரிகளை அதிகரிக்கும் வகையில் பந்தயம் மற்றும் கேமிங் லெவி சட்டமும் திருத்தப்பட்டுள்ளது. ஆண்டு வரி நேரடி பந்தய மையங்களுக்கு 6 லட்சம் முதல் ஒரு மில்லியன்வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post