அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று காலை பதவியேற்க இருந்தபோதும், அது அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவையின் எண்ணிக்கை 15 பேருடன் வரையறுக்கப்பட்டிருந்தது என்று தெரிகின்றது. அந்த அமைச்சரவையில் நாமல், பஸில், சமல், சஷீந்தர ராஜபக்சக்கள் உள்ளடக்கப்படவில்லை.
அமைச்சரவை பதவியேற்பதற்கு சுப நேரம் இன்மையாலேயே இன்று பதவியேற்கவில்லை என்று கூறப்படுகின்றது. ஆனால் அதற்கு வேறு காரணங்களும் கூறப்படுகின்றது.
அமைச்சரவை 15 பேருடன் வரையறுக்கப்பட்டுள்ளதால், ஆளுங்கட்சி மூத்த பிரமுகர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது.
அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிவிடலாம் என்ற அச்சத்திலேயே பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகின்றது.
அதேவேளை, அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளமையும் பதவியேற்புப் பிற்போடப்படக் காரணம் என்று கூறப்படுகின்றது.
Discussion about this post