அமெரிக்காவில் சுதந்திர தினத்தை ஒட்டி நடந்த அணிவகுப்பு ஒன்றில் கலந்து கொண்ட பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது.
ஹைலான்ட் பூங்கா (Highland Park) பகுதியில் – இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் முப்பது பேர் காயங்களுடன் மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். சிறு குழந்தைகளும் தாக்குதலில் சிக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
பொலீஸாரின் தகவல்களின்படி 18-20 வயது மதிக்கத்தக்க-ஆயுதம் தாங்கிய – ஆபத்தான – வெள்ளை நிற இளைஞர் ஒருவரே தாக்குதலாளி என்றும் சனக் கூட்டத்தின் மீது சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி விட்டார் என்று கூறப்படுகிறது.
தாக்குதலாளி அங்குள்ள கட்டடம் ஒன்றின் கூரைப் பகுதியில் ஒளிந்திருந்தே முதலில் சுட்டுள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது.
பின்னர் அவர் துப்பாக்கி ஒன்றைக் கைவிட்டுவிட்டே தப்பியுள்ளார். அவரைப் பிடிப்பதற்காகப் பெரும் தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post